கோலாலம்பூர், டிச.12-
துணைப்பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி சம்பந்தப்பட்ட அந்நியத் தொழிலாளர்களுக்கான விசா முறை தொடர்பிலான 40 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பில் சட்டத்துறை அலுவலகம் விளக்கம் அளிக்க வேண்டும் மலேசிய ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்கமான எம்.சி.டபிள்யூ. வலியுறுத்தியுள்ளது.
40 குற்றச்சாட்டுகலிருந்து அகமட் ஜாஹிட்டை விடுவிப்பதற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இன்று புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று நிலைநிறுத்தியுள்ளது.
ஜாஹிட்டிற்கு எதிராக 40 குற்றச்சாட்டுகள் மீட்டுக்கொள்ளப்பட்டது தொடர்பில் சட்டத்துறை அலுவலகம் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அந்த அமைப்பின் தலைவர் ஜாயிஸ் அப்துல் கரீம் சட்டத்துறை அலுவலகத்தை கேட்டுக்கொண்டார்.
நாட்டின் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை தொடர்ந்து மீட்சிப்படுத்துவதற்கு அகமட் ஜாஹிட் விடுவிப்பு குறித்து சட்டத்துறை அலுவலகம் உரிய விளக்கத்தை அளிப்பது காலத்தின் கட்டாயமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.