பலரால் கேள்வி எழுப்பப்பட்டு வந்த பாரிசான் நெசனல் சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் தனது கையிக்கு முழுமையாக வந்து விட்டதாகவும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல் வருகின்ற ஜூலை 21 ஆம் அறிவிக்கப்படும் என அம்னோ கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அமாட் சாஹிட் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
வருகின்ற 6 மாநிலங்களுக்கான சட்டமன்ற தொகுதிகளில் யாரை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும் என பல ஆலோசனைகள் மற்றும் சீர்தூக்குதலுக்கு பின்னரே இந்த வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது என சாஹிட் கூறினார்.
வருகின்ற ஜூலை 21ஆம் நாள் PWTC அரங்கில் அதிகாரப்பூர்வமான நிகழ்வில் இந்த வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.