Oct 28, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
அரசியல்

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது

Share:

நவம்பர்- 10

கடந்த வெள்ளிக்கிழமை, துணை நிதியமைச்சரும் Tanjong நாடாளுமன்ற உறுப்பினருமான Lim Hui Ying இன் நாடாளுமன்ற சேவை மையத்தின் ஏற்பாட்டில் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அத்தொகுதியைச் சார்ந்த 1000 பேருக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் DAP கட்சியின் தேசியத் தலைவர் Lim Guan Eng, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினருமான RSN ராயர், Dr லிங்கேஸ்வரன் ஆகியோர் உட்பட பல அரசியல், சமூகப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு சுவையான இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. கண்கவர் பண்பாட்டு நடனங்கள் வந்திருந்தவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தீபாவளியின் ஒளி நம் அனைவரின் வாழ்க்கையில் புதிய பிரகாசத்தையும் ஒளிமயமான வாய்ப்புகளையும் கொண்டு வரட்டும் என Lim Hui Ying தமது வாழ்த்துரையில் குறிப்பிட்டார்

Related News