Oct 27, 2025
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு வெற்றினால் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் மிதப்பில் திளைக்க வேண்டாம்
அரசியல்

கோலகுபு பாரு வெற்றினால் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் மிதப்பில் திளைக்க வேண்டாம்

Share:

பெட்டாலிங் ஜெயா, மே 17 -

நடந்து முடிந்த கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள தலைவர்கள் மிதப்பில் திளைக்க வேண்டாம் என்று பிகேஆர் கட்சியின் பாசிர் குடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் கரீம் கேட்டுக்கொண்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் ஒவ்வொரு தலைவரும், வெற்றி பெற்று விட்டோம் என்று ஒரேடியாக குதூகலத்தின் உச்சியில் மிதக்காமல், தங்கள் கால்களை தரையில் வைத்து, அதன் ஆதரவு தளத்தை வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும், முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்று ஹசன் கரீம் வலியுறுத்தினார்.

கோலகுபு பாரு இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்கு மலாய்க்காரர்களின் ஆதரவு கணிசமான அளவில் அதிரித்து இருந்தாலும் இளையோர்களின் ஆதரவையும், அவர்களின் வாக்குகளையும் பெறுவதில் தோல்விக் கண்டு இருப்பதால் ஒற்றுமை அரசாங்கத் தலைவர்கள் சற்று அடக்கியே வாசிக்க வேண்டும் என்று ஹசன் கரீம் கேட்டுக்கொண்டார்.

இந்த இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப் பெற்றதற்கு இந்திய சமுதாயத்தின் ஆதரவு பெரும் பங்காற்றியிருப்பதையும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஹசன் கரீம் நினைவுப்படுத்தினார்.

குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் கிடந்த 5 தோட்டங்களைச் சேர்ந்த முன்னாள் பாட்டாளி குடும்பங்களின் வீட்டுப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சர்கள் மேற்கொண்ட முயற்சி, இந்திய சமுதாயத்தின் ஆதரவை திருப்புவதில் வெற்றிக் கிட்டியுள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!