Apr 19, 2026
Thisaigal NewsYouTube
முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு
அரசியல்

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.09-

பெர்சாத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சிறப்புக் கூட்டம் அரசியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அக்கூட்டத்தில், பெர்சாத்து கட்சியின் பொதுச்செயலாளர் முஹமட் அஸ்மின் அலி மற்றும் உதவித் தலைவர் அஹ்மாட் ஃபைஸால் அஸுமு உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ளும் சிறப்புக் கூட்டம் என அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

இருப்பினும், ரமலான் பண்டிகையை வரவேற்கும் விதமாக இக்கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

அண்மையில், பெர்சாத்து கட்சியின் தலைமைத்துவத்தில் ஏற்பட்டுள்ள சலசலப்பிற்கு மத்தியில் இச்சிறப்பு கூட்டமானது நடைபெற்றுள்ளது.

குறிப்பாக, கட்சித் தலைவர் தரப்பினருக்கும், துணைத் தலைவர் தரப்பினருக்கும் இடையே வெளிப்படையான மோதல் அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Related News