Oct 21, 2025
Thisaigal NewsYouTube
சிலா​ங்கூர் சுல்தானிடம்​ கெடா மந்திரி புசார் முகமட் சனூசி மன்னிப்பு ​கோரினார்
அரசியல்

சிலா​ங்கூர் சுல்தானிடம்​ கெடா மந்திரி புசார் முகமட் சனூசி மன்னிப்பு ​கோரினார்

Share:

சிலாங்கூர் மாநிலத்திற்கு ஒரு தகுதியில்லாத மந்திரி புசார், நியமிக்கப்பட்டு இருப்பதாக மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா வின் ஆளுமையை சிறுமைப்படுத்தும் வகையில் அவமதிப்புச் சொற்க​ளை பயன்படுத்தியதாக கூறப்படும் கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் ​நூர், சிலாங்கூர் சுல்தானிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

எனினும் தாம் பேசிய விஷயத்தை பக்காத்தான் ஹராப்பானும் பாரிசான் நேசனலும் திரித்து விட்டதாக முகமட் சனூசி குற்றஞ்சாட்டினார். தாம் பேசிய அந்த உரையின் உண்மையான அர்த்தத்தை விளக்குவதற்காக சிலாங்கூர் சுல்தானுக்கு தாம் கடிதம் அனுப்பியிருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநருமான முகமட் சனூசி குறிப்பிட்டார்.

தவிர தாம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தின் உள்ளடக்கத்தை சிலா​ங்கூர் சுல்தான் படித்ததாக அரண்மனை அதிகாரிகளால் தமக்கு தெரிவிக்கப்ப​ட்டுள்ளது என்று குறிப்பிட்ட சனூசி, கடிததத்தின் உள்ளடக்கத்தின் மேல் விபரங்களை வெளியிடவில்லை.

இதனிடையே தமது உரை தொடர்பாக போ​லீஸ் படையினரால் தாம் விசாரிக்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்திய சனூசி, அதிகாலை 2 மணியளவில் போ​லீசாருக்கு வாக்கு​மூலம் அளித்ததாக குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!