டிச. 8-
முன்னாள் துணை அமைச்சரும் UMNO Padang Besar பிரிவுத் தலைவருமான Zahidi Zainul Abidin பிகேஆர் கட்சியில் இணைந்துள்ளார். 16வது பொதுத் தேர்தலின்போது, பெர்லிஸ் மாநிலத்தில் பிகேஆர் கட்சியை வெற்றி பெறும் நோக்கில் வலுப்படுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
PKR தலைவர் அன்வர் இப்ராஹிம்-இன் ஒப்புதலுடன் அவர் பிகேஆர் கட்சியில் இணைந்துள்ளார். மேலும் பெர்லிஸ் மாநிலம் முழுவதும் 400 கிளைகளை நிறுவும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளார் Zahidi Zainul Abidin
பெர்லிஸ் மாநிலத்தின் மலாய் வாக்காளர்களின் ஆதரவை PKR கட்ட்சிக்கு ஈர்க்கும் வகையில் புதிய அரசுயல் வியூகங்களைக் கொண்டு வர விரும்புவதாகக் கூறினார்.
PKR-பாக்கத்தான் ஹரப்பானுக்கு ஏற்கனவே சீனர்களின் 90 விழுக்காடு வாக்கு ஆதரவு உள்ளது, ஆனால் மலாய்களின் வாக்குகள் உறுதியாக இல்லை
தற்போது பெர்ஸில் மாநிலத்தில் பிகேஆர் கட்சிக்கு சுமார் 60 கிளைகள் உள்ளன, மேலும் இந்த மாநிலத்தில் வெற்றி பெற மக்களின் ஆதரவை அதிகரிக்க 400 கிளைகளை தாம் அதிகரிக்க இருப்பதாக அவர் உத்துசான் மலேசியாதஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
கடந்த 15வது பொதுத் தேர்தலின்போது, Zahidi Padang Besar நாடாளுமன்றத் தொகுதியில் BARISAN NASIONALஇன் வேட்பாளராக களமிறக்கப்படவில்லை, ஆனால் சுயேச்சையாக போட்டியிட்டார், இதனால் அவர் UMNO-வில் இருந்து வெளியேறினார். அவர் நாடாளுமன்றத்திலும் Titi Tinggi சட்டமன்றத்திலும் போட்டியிட்டுத் தோல்வியைத் தழுவினார், தோற்றார்.
Zahidi 2021 முதல் 2022 வரை தகவல் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சராகப் பதவி வகித்திருந்தார்.
பெரிக்கத்தான் நேஷனல் பெர்லிஸ் மாநிலத்தைஸாட்சி செய்த காலத்தில், மாநில வருவாயை அதிகரிப்பதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.








