கோலாலம்பூர், டிசம்பர்.16-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று பிற்பகல் 3.30 மணியளவில் புத்ராஜெயாவில் அமைச்சரவை சீரமைப்பை அறிவித்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஆர். ரமணன், மனித வள அமைச்சராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவி மாற்றப்பட்டுள்ளார்.
இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹன்னா இயோ, கூட்டரசுப் பிரதேசத்திற்குப் பொறுப்பேற்று, பிரதமர் துறை அமைச்சராகப் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸுல்கிஃப்லி ஹசான், சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சராகப் பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
டத்தோ ஶ்ரீ ஜொஹாரி அப்துல் கானி, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகப் பதவி மாற்றப்பட்டுள்ளார்.
புதிய பொருளாதார அமைச்சராக அக்மால் நஸ்ருல்லா முகமட் நாசீர் நியமிக்கப்பட்டள்ளார்.
புதிய இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக முகமட் தௌஃபிக் ஜொஹாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக அர்துர் ஜோசஃப் குருப் நியிமக்கப்பட்டுள்ளார்.
தோட்டம் மற்றும் மூலத் தொழில்துறை அமைச்சராக நோராய்னி அஹ்மாட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சபா, சரவாக் விவகாரங்களுக்கான அமைச்சராக டத்தோ முஸ்தஃபா சக்மூட் நியமக்கப்பட்டுள்ளார்.
துணை அமைச்சர் பதவிகளுக்கும் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் சில மாற்றங்களை அறிவித்துள்ளார்.
சரஸ்வதி கந்தசாமி துணை அமைச்சராக பதவி வகித்து வந்த தேசிய ஒன்றுமைத்துறையின் புதிய துணை அமைச்சர் பதவிக்கு சிகமாட் எம்.பி. யுனேஸ்வரன் ராமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை துணை அமைச்சராக லியூ சின் தோங் நியமிக்கப்பட்டுள்ளார்.
சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை துணை அமைச்சராக மர்ஹாமா ரோஸ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக முகமட் அலாமின் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை துணை அமைச்சராக சிம் ஸீ ஸிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
துணை நிதி அமைச்சராக இருந்த லிம் ஹுய் யிங், மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சராக பதவி மாற்றப்பட்டுள்ளார்.








