Aug 28, 2026
Thisaigal NewsYouTube
"நாம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அல்ல" – தெங்கு ஸாஃப்ருல்
அரசியல்

"நாம் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அல்ல" – தெங்கு ஸாஃப்ருல்

Share:

குவாந்தான், ஏப்ரல்.11-

16-ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், பிகேஆர் கட்சியினர் எதிர்க்கட்சி மனப்பான்மையிலிருந்து விலகி, ஆளுங்கட்சியாகச் செயல்பட வேண்டும் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஸிஸ் வலியுறுத்தியுள்ளார். கட்சிக் கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், வெறும் மேடைப் பேச்சுகளோடும் சமூக ஊடகங்களோடும் நின்று விடாமல், மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று நம்பிக்கையை வளர்க்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக் காட்டினார். குறிப்பாக, கட்சியினரிடையே ஒற்றுமை மிகவும் முக்கியம் என்றும், ஒரு பலமான குழுவாகச் செயல்பட்டால் மட்டுமே நிர்வாகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும் அவர் தனது முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

Related News