மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலு சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும், அதன் சிலாங்கூர் மாநிலத் தலைருமான முகமது அஸ்மின் அலி வெற்றி பெற்றார். அஸ்மின் அலிக்கும், பக்கத்தான் ஹராப்பானின் பலம் பொருந்திய வேட்பாளரான முன்னாள் புக்கிட் மெலாவத்தி சட்டமன்ற உறுப்பினர் ஜுவைரியா சுல்க்ஃப்லி க்கும் இடையில் நடைபெற்ற இந்த பலப்பரீட்சையில் 1,940 வாக்குகள் வித்தியாசத்தில் அஸ்மின் அலி வெற்றிபொற்றார். தனது முன்னாள் அரசியல் மாணவியான 38 வயது ஜுவைரியா வை வீழ்த்த முடியும் என்று கூறி வந்த நிலையில் இந்த நேரடிப் போட்டியில் அஸ்மின் அலிக்கு 19,675 வாக்குகள் கிடைத்தன. ஜுவைரியா 17,735 வாக்குகள் பெற்றார். ஜுவைரியா, கடந்த 2013, 2018 ஆகிய பொதுத் தேர்தல்களில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார். அஸ்மின் அலியை வீழ்த்துவதற்காக ஜுவைரியா, புக்கிட் மெலாவத்தியிலிருந்து பிரத்தியேகமாக உலு கிள்ளானுக்கு களம் இறக்கப்பட்டார்.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு


