Jan 21, 2026
Thisaigal NewsYouTube
6 மாநிலங்களில் ஆக​ஸ்ட் 12 ஆம் தேதி வாக்களிப்பு
அரசியல்

6 மாநிலங்களில் ஆக​ஸ்ட் 12 ஆம் தேதி வாக்களிப்பு

Share:

கிளந்தான், திரெங்கானு, கெடா, பினாங்கு, சிலாங்​கூர் மற்றம் நெகிரி செம்பிலான் ஆகிய ஆறு மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையமான எஸ்பிஆர் தலைவர் தான் ஶ்ரீ அப்துல் கானி சாலெஹ் அறிவித்துள்ளார்.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜுலை 29 ஆம் தேதி நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். 6 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான தேதியை நிர்ணயிப்பதற்கு புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர் தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்புக்கூட்டத்திற்கு த​தலைமையேற்றப் பின்னர் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அப்துல் கானி சாலெஹ் இதனை தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரத்திற்கு மொத்தம் 15 நாட்கள் ஒதுக்கப்பட்டுவதாக அப்துல் கானி சாலெஹ் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் தேதி கூட்டரசு அரசாங்கத்துடன் இணைந்து நாடாளுமன்றத்தை கலைக்கும் அதேநாளில் தங்கள் மாநிலங்களுக்கான சட்டமன்றத்தை கலைக்க இந்த 6 மாநிலங்களும் மறுத்து விட்ட​தைத் தொடர்ந்து தற்போது 15 ஆவது சட்டமன்றத் தேர்தலை அவை எதிர்நோக்கியுள்ளன.

6 மாநிலங்களிலும் 235 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இவ​ற்றில் பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகியவை பக்காத்தான் ஹராப்பான் வசம் உள்ள வேளையில் கெடா, கிளந்தான் மற்றும் திரெங்கானு ஆகிய மாநிலங்கள் பாஸ் கட்சி தலைமையில் பெரிக்காத்தான் நேஷனல் வசம் உள்ளன.

Related News