Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பேச்சு வார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது

ஜாசின், மே.25-

சபா மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து ஒற்றுமை அரசாங்கத்தின் எந்தவொரு கூட்டணிக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த தேசிய முன்னணி தயாராக உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடமிருந்து வரும் பரிந்துரைகளை ஏற்கத் தாம் தயாராக இருப்பதாகவும், ஆனால் பரஸ்பர திருப்திக்காக அவை பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தேசிய முன்னணியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறினார். முந்தையத் தேர்தலில் வென்ற இடங்கள் உட்பட, தொகுதிகள் குறித்து கவனமாகப் பேச்சுவார்த்தை தேசிய முன்னணி நடத்தும். சபா மாநிலத்தின் 17வது தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுடனும், மாநிலக் கட்சிகளுடன் இறுதிப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →