Oct 25, 2025
Thisaigal NewsYouTube
வீட்டுக்காவலில் வைப்பதற்கு அனுமதி கோரும் மேல்முறையீட்டில் நஜீப் ஆஜராவதற்கு அனுமதி
அரசியல்

வீட்டுக்காவலில் வைப்பதற்கு அனுமதி கோரும் மேல்முறையீட்டில் நஜீப் ஆஜராவதற்கு அனுமதி

Share:

புத்ராஜெயா, டிச.4-


தம்மை வீட்டுக் காவலில் வைப்பதற்கு அனுமதிக்கும் அரச ஆணை மீதான சர்ச்சையில் உயர்நீதிமன்ற முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் செய்து கொண்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் அவர் ஆஜராவதற்கு புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.

நஜீப்பின் இந்த மேல்முறையீடு மீதான வழக்கு விசாரணை நாளை டிசம்பர் 5 ஆம் தேதி வியாழக்கிழமை அப்பீல் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இந்த வழக்கின் மேல்முறையீட்டாளர் என்ற முறையில் நஜீப் ஆஜராக முடியும் என்று மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற அப்பீல் நீதிமன்ற நீதிபதி மரியானா யாயா தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

தம்மை வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் அரச ஆணையை செயல்படுத்தக்கோரி நஜீப் செய்து கொண்ட வழக்கு மனுவை கடந்த ஜுலை மாதம் 3 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அத்தீர்ப்பை எதிர்த்து, நஜீப் செய்து கொண்டுள்ள மேல்முறையீடு நாளை வியாழக்கிழமை பிற்பகலில் மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவினரால் விசாரிக்கப்படவிருக்கிறது.

1எம்.டி.பி. அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் நிதி மோசடி குற்றத்திற்காக நஜீப்பிற்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை, 6 ஆண்டுளாக குறைக்கப்பட்டுள்ளது.

எனினும் தம்முடைய எஞ்சிய இந்த 6 ஆண்டு கால சிறைத் தண்டனை காலத்தை விட்டுக் காவலில் கழிப்பதற்கு முன்னாள் மாமன்னர் அனுமதி வழங்கி இருப்பதால், அந்த அரச ஆணையை ஏற்று செயல்படுத்த அரசாங்கத்தற்கு உத்தரவிடுமாறு தமது மேல்முறையீட்டு மனுவில் நஜீப் கோரியுள்ளார்.
[11:09 am, 4/12/2024] Emsamy Thisaigal news: 17 மில்லியன் மலேசியர்களின் மைகாட் தரவுகள் கசிந்துள்ளனவா?

கோலாலம்பூர், டிச.4-
17 மில்லியன் அல்லது ஒரு கோடியே 70 லட்சம் மலேசியர்களின் மைகாட் தரவுகள் கசிந்துள்ளதாகவும், அவை கள்ளச்சந்தை அகப்பக்கத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

X கணக்கில், Fusion Inteligence Center @ StealthMole என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் இப்படியொரு குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

அந்த அகப்பக்கத்தில் மைகாட் அட்டைகளின் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நிதி மோசடி இடர்கள் போன்ற ஏமாற்று வேலைகளுக்கு மலேசியர்களின் தரவுகள் பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

எனினும் X கணக்கில் வெளியான இந்த செய்தியின் நம்பகத்தன்மை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கோடியே 30 லட்சம் மலேசியர்களின் தரவுகள், தேர்தல் ஆணையம், அஸ்ட்ரோ மற்றும் மே பேங்க் மூலமாக கள்ளச்சந்தை அகப்பக்கத்தில் கசித்துள்ளதாக இதேபோன்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News