Oct 10, 2026
Thisaigal NewsYouTube

சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 தொகுதிகளைக் கைப்பற்ற முடியும்

ஷா ஆலாம், ஜூன்.14-

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மேலும் 10 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றும் ஆற்றலில் பெரிக்காத்தான் நேஷனல் இருப்பதாக அதன் தலைவர் அஸ்மின் அலி கூறுகிறார்.

இதன் மூலம் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றி, பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி மலரும் சாத்தியம் உள்ளது என்று மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசாரான அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

தற்போது பெரிக்காத்தான் நேஷனல், தன்னகத்தே கொண்டுள்ள 4 மாநிலங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில், 5 ஆவது மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூருக்கு அப்பாற்பட்ட நிலையில் ஜோகூர், மலாக்கா மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மூன்று மாநிலங்கள், பெரிக்காத்தான் நேஷனலின் கவனத்திற்குரிய மாநிலங்களாக விளங்குகின்றன என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →