Aug 16, 2026
Thisaigal NewsYouTube
  நெகிரி மாநிலத் தேர்தல்: 13,263 தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகித்தது தேர்தல் ஆணையம்
அரசியல்

நெகிரி மாநிலத் தேர்தல்: 13,263 தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகித்தது தேர்தல் ஆணையம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்காக தகுதியுடைய வாக்காளர்களுக்கு 13,263 தபால் வாக்குச் சீட்டுகள் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் அதிகாரிகள், போலீசார், ராணுவத்தினர் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு 12,669 வாக்குச் சீட்டுகளும், வெளிநாட்டில் வாழும் மலேசியர்களுக்கு 343 வாக்குச் சீட்டுகளும், பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு 251 வாக்குச் சீட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த விநியோகம் நடைபெற்றது.

தபால் வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டுகளைப் பூர்த்தி செய்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நாள் மாலை 5 மணிக்கு முன் அந்தந்த தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையச் செயலாளர் டத்தோ கைருல் ஷாரில் இத்ரிஸ் நினைவுறுத்தினார். மேலும், வாக்குச் சீட்டுகளைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிரக் கூடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். இத்தேர்தலில் மொத்தம் 36 தொகுதிகளுக்கு 103 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

Related News

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஜசெக நாளை எடுக்கவிருக்கும் முடிவு: சாதகமான முடிவை எதிர்பார்க்கும் பிகேஆர்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

ஸாஹிட்டுடன் நம்பிக்கை பிரச்சினையா? – அது கைரியின் தனிப்பட்ட கருத்து!” என்கிறார் அன்வார்

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பலவீனங்களை ஒப்புக்கொண்டு பிகேஆர் தொடர்ந்து முன்னேற வேண்டும் - ஃபட்லினா சிடேக் வலியுறுத்து

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பி.கே.அர் கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்தார் வோங் சென்

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

நெகிரி மாநிலத் தேர்தல்: 13,263 தபால் வாக்குச் சீட்டுகளை... | Thisaigal News