காப்பார் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாஸ் கட்சியின் பலம் பொருந்திய கோட்டையான மேரு தொகுதியை பக்காத்தான் ஹராப்பான் முதல் முறையாக கைப்பற்றியுள்ளது. கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் காப்பார் நாடாளுன்றத் தொகுதியை பாஸ் கட்சியின் பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் டாக்டர் ஹலிமா அலி கைப்பற்றிய வேளையில் மேரு சட்டமன்றத் தொகுதியை பாஸ் கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் தற்காத்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அமானா கட்சி சார்பாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிட்ட மரியம் அப்துல் ரஷீத் 3,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் மரியத்திற்கு 26,980 வாக்குகளும், பாஸ் கட்சியை சேர்ந்த பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் ஹஸ்னிஸான் ஆதம் மிற்கு 23,558 வாக்குகளும், மலேசிய சோசலிச கட்சியை சேர்ந்த சிவரஞ்சனி மாணிக்கத்திற்கு 900 வாக்களும் கிடைத்தன.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


