Sep 26, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லத்தக்கதே – சட்டத்துறை தலைவர் திட்டவட்டம்
அரசியல்

நெகிரி செம்பிலான் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லத்தக்கதே – சட்டத்துறை தலைவர் திட்டவட்டம்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 10 ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பதவி நீக்கம் செல்லத்தக்கதே என்று சட்டத்துறை தலைவர் டுசுக்கி மொக்தார் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் பதவி நீக்கம் அமலுக்கு வருவதாக வெளியிடப்பட்ட அரசிதழ், மாநில அரசமைப்புச் சட்டத்தின் 38(5)-வது பிரிவுக்கு ஏற்ப அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்தப் பிரிவின்படி, மந்திரி பெசாரை தவிர மற்ற ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில ஆட்சியாளர் யாங் டி-பெர்துவான் பெசாரின் விருப்பத்திற்குட்பட்டே பதவி வகிப்பார்கள் என்று டுசுக்கி விளக்கினார்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட 10 பேரும் நெகிரி செம்பிலான் யாங் டி-பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸுக்கு அளித்த விசுவாச உறுதிமொழியை மீறியதாக அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்னோவைச் சேர்ந்த ஏழு பேர், மசீசவைச் சேர்ந்த ஒருவர், பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர், வாவாசான் கட்சியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 10 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

துவாங்கு முஹ்ரிஸை யாங் டி-பெர்துவான் பெசார் பதவியிலிருந்து நீக்கியதாக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த அறிக்கையை மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிமும் ஆதரித்திருந்தார்.

எனினும், அந்த நடவடிக்கைக்கு மாநிலத்தின் தேவான் கெஅடிலான் டான் உண்டாங் மற்றும் சட்டத்துறை தலைவர் அலுவலகம் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

பத்து ஆட்சிக்குழு உறுப்பினர்களும், மாநில அரசு கட்டடமான விஸ்மா நெகிரிக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related News

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரத்தில் தலையிட மாட்டேன் – அன்வார்

நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் விவகாரத்தில் தலையிட மாட்டேன் – அன்வார்

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே

சபா, சரவாக் மாநிலங்களுக்கு கூடுதல் நாடாளுமன்றத் தொகுதிகள் எத்தனை? - புத்ரா ஜெயாவிடம் விளக்கம் கேட்கிறார் சாலே

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி

நெகிரி செம்பிலான் அரச குடும்ப விவகாரத்தில் தலையிடவில்லை - உண்டாங்களுக்கு அன்வார் பதிலடி

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி