Oct 27, 2025
Thisaigal NewsYouTube
சுங்காய் பக்காப் இடைத்தேர்தலில் PKR கட்சி போட்டியிடுகின்றது
அரசியல்

சுங்காய் பக்காப் இடைத்தேர்தலில் PKR கட்சி போட்டியிடுகின்றது

Share:

பினாங்கு, ஜூன் 04-

வரக்கூடிய பினாங்கு, சுங்காய் பக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், பாக்காத்தான் ஹாராப்பான் சார்பில் PKR கட்சி போட்டியிடவுள்ளது.

பினாங்கு ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய அம்மாநில முதலமைச்சர் சௌ கோன் இயோவ், அத்தேர்தலுக்கு பினாங்கு துணை முதலமைச்சர் முகமது அப்துல் ஹமீத் தலைமையேற்பார் என்றார் அவர்.

3 தவணைகள் அத்தொகுதி PKR-ரின் வசமிருந்த நிலையில், கடந்தாண்டு நடைபெற்ற பினாங்கு சட்டமன்ற தேர்தலில், பெரிக்காதான் நசியனால் கூட்டணி சார்பில் போட்டியிட்டிருந்த பாஸ் கட்சி அத்தொகுதியை வென்றிருந்தது.

கடந்த மே மாதம் 24ஆம் தேதி, சுங்காய் பக்காப் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீப் உடல்நலக்குறைவால் காலமானதை அடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வரக்கூடிய இடைத்தேர்தலில், சுங்காய் பக்காப் தொகுதியை மீண்டும் PKR கட்சி வெல்வதற்கு, அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்படும் என சௌ கோன் இயோவ் கூறினார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!