புத்ராஜெயா, டிசம்பர்.17-
தமது தலைமையிலான அமைச்சரவையை அதிரடியாக சீரமைத்துள்ள பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், தமது நடவடிக்கையை இன்று தற்காத்துப் பேசினார். தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையானது, இளம் தலைமைத்துவத்திற்கு வழிவிடும் நோக்கத்தைக் கொண்டதாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்
அமைச்சரவையையும், கட்சியையும் ஒரு நீண்ட காலத்திற்கு வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக இளைஞர்களிடையே புதிய தலைமைக்கான இடத்தை திறக்கும் நோக்கத்துடன் அமைச்சரவை சீரமைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.
தற்போதையை சூழ்நிலையில் நாட்டின் தலைமைத்துவத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறைக்குப் பொறுப்பேற்கும் திறன் கொண்ட அனுபவம் வாய்ந்த இளம் தலைவர்களின் வரிசையை உருவாக்கும் நோக்கில் அமைச்சரவை சீரமைப்பு நடைபெற்றுள்ளதாக புத்ராஜெயாவில் இன்று ஊடகவியல் துறையின் மூத்த ஆசிரியர்களுடன் நடத்திய சந்திப்பின் போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.








