Sep 24, 2026
Thisaigal NewsYouTube
பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி
அரசியல்

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடையும் பாரிசான் நேஷனல் வேட்பாளர்களுக்கு 'நியமன சட்டமன்ற உறுப்பினர்' பதவிகள் வழங்கப்படாது என ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஆன் ஹாபிஸ் காசி அண்மையில் கூறியிருந்தார்.

இது குறித்து ஸ்கூடாய் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் கார்த்தியாயினி ஜெயபாலன் இன்று முக்கியக் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். இத்தேர்தலில் பிஏஎஸ் கட்சி பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடாத நிலையில், பிஎன் மற்றும் பிஏஎஸ் இடையே ஏதேனும் திரைக்குப் பின்னால் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஆன் ஹாபிஸ் காசி ஜோகூர் சட்டமன்றத்தில் 5 நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்க கடந்த மே மாதம் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. இந்த இடங்கள் பிஏஎஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவுள்ளனவா? என்பதை வாக்காளர்களுக்கு பாரிசான் நேஷனல் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று கார்த்தியாயினி வலியுறுத்தியுள்ளார்.

Related News