பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் கீழ் நெகிரி செம்பிலான் மாநிலம் கல்வி, பொருளாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலன் என அனைத்துத் துறைகளிலும் வியக்கத்தக்க மாபெரும் மாற்றங்களைக் கண்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் ரெப்பா சட்டமன்றத்திற்கு ஐந்தாவது முறையாக பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடுபவருமான எஸ். வீரப்பன் தெரிவித்துள்ளார்.
கடந்த கால ஆட்சிகளை விட தற்போதைய ஆட்சியில் மக்களின் அடிப்படைத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தி செய்யப்படுவதோடு, பல்லின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல புதிய திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அடித்தட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும் வகையிலும், மாநிலத்தின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை நவீனப்படுத்தும் வகையிலும் பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதுடன் தாம் ரெப்பா தொகுதியில் ஐந்தாவது தடடையாக மீண்டும் போட்டியிடுவதற்கான அவசியத்தை வீரப்பன் விவரித்தார்.

எனவே, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் வெறும் வாக்குறுதிகளை மட்டும் வழங்கும் அரசல்ல, மாறாக சொன்னதைச் செய்து காட்டும் மக்கள் அரசு என்பதை கடந்த காலச் சாதனைகள் நிரூபித்துள்ளன. நெகிரி செம்பிலான் மாநிலத்தை மேலும் ஒரு உன்னத நிலைக்குக் கொண்டு செல்லவும், தொடங்கிய வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் தங்குதடையின்றி மக்களைச் சென்றடையவும் தற்போதைய ஆட்சி தொடர வேண்டியது அவசியமாகும். இன, மத பாகுபாடின்றி ஒட்டுமொத்த மாநில மக்களின் நல்வாழ்விற்காகவும், அடுத்த தலைமுறையின் பிரகாசமான எதிர்காலத்திற்காகவும் எங்களின் இந்த மக்கள் சேவை என்றும் ஓயாது தொடரும்" என்று கூறி எஸ். வீரப்பன் தனது நெகிழ்ச்சியுடன் திசைகளிடம் தெரிவித்தார்.








