வரும் சிலாங்கூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மஇகாவிற்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை கட்சியின் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மறுத்துள்ளார்.
மஇகா விற்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று சரவணன் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் செந்தோசா தொகுதியில் மஇகா போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்பு இருக்கிறது. அதன் அடிப்படையில் செந்தோசா தொகுதியை மஇகா கோரியது. ஆனால், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் ஆகியவற்றுக்கு இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் செந்தோசா தொகுதி பிகேஆர்க்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என்று சரவணன் விளக்கினார்.
இதனிடைய சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் மஇகாவிற்கு மொத்தம் எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற இன்னும் உறுதியாக தெரியவில்லை என்று சிலாங்கூர் மாநில மஇகா தொடர்புக்குழுத் தலைவர் ம.பி, ராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் சுஙாய் துவா, இஜோக் மற்றும் செந்தோசா ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட மஇகா, ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
