Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

பாஸ் கட்சி நடவடிக்கையில் இறங்குவாக மிரட்டல்

Share:

ஷாரியா சட்டங்களை நிலைநிறுத்த புத்ராஜெயா தவறுமானால் எதிர்க்கட்சி என்ற முறையில் பாஸ் கட்சி நடவடிக்கையில் இறங்கும் என்று அந்த மதவாத கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் மிரட்டல் விடுத்துள்ளார். இஸ்லாமிய சட்டங்களுக்கு சவால்விடும் கும்பல்கள் நாட்டில் இருப்பதாக குறிப்பிட்ட அவர்,அதற்கு முன்னதாக​வே ஷாரியா சட்டங்கள் நிலைநிறுத்தப்படுவதை புத்ராஜெயா உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தாங்கள் விடுக்கும் இந்த கோரிக்கையை நிறைவேற்ற புத்ராஜெயா தவறுமானால் பாஸ் கட்சியை உள்ளடக்கிய பெரிக்காத்தான் நேஷனல் எத்தகைய நடவடிக்கையில் இறங்கும் என்பதை ஹாடி அவா​ங் விவரிக்கவில்லை. அதவேளையி​ல் பெரிக்காத்தான் நேஷனல் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் முஸ்லிம் அல்லாதவர்களின் உரிமைகளை மறுப்பதாக இருக்காது என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News