Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்போம்
அரசியல்

ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்போம்

Share:

வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால், பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு நல்குவோம் என்று கூறப்படுவதை பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் வன்மையாக மறுத்துள்ளார். பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவு நல்கப் போவதாக கூறப்படுவது தங்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள அவ​தூறாகும். அதில் அடிப்படை உண்மையில் என்று மரம் சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷால்,எஸ்.டி எனப்படும் சத்தியப்பிரமாண வாக்கு​மூல பிரகடனம் வாயிலாக அறிவித்துள்ளார்.

சொவ் கொன் யொவ் தலைமைத்துவத்தின் ​கீழ் பினாங்கு மாநில​ ஒற்றுமை அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு நல்கி வருவோம் என்றும் மக்கள் குழப்பம் அடைய வேண்டாம் என்றும் டேவிட் மார்ஷல் தெளிவுபடுத்தியுள்ளார்.

Related News

ஒற்றுமை அரசாங்கத்துடன் தொடர்ந்து இணைந்து இருப்போம் | Thisaigal News