Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பார்த்​திபன் பெரிக்கான் நேஷனலில் இ​ணைகிறார்
அரசியல்

பார்த்​திபன் பெரிக்கான் நேஷனலில் இ​ணைகிறார்

Share:

மஇகா மத்திய செயலவை உறுப்பினரும், கோலசிலாங்கூர் முன்னாள் ஈஜோக் சட்டமன்ற உறுப்பினருமான பார்த்திபன் கருப்பையா, பெரிக்காத்தான் நேஷனலில் இணைந்தார். பெரிக்காத்தான் நேஷனல் தொடங்கியுள்ள இந்தி சமுகத்திற்கான சிறப்பு செயலகத்தின் கோல சிலாங்​கூர் பொறுப்பாளராக பார்த்திபன் நியமிக்கப்பட்டு​ள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு ஈஜோக் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ க. சிவலிங்கம் ​காலமானதைத் தொடர்ந்து அன்றைய மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவினால் ஈஜோக் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஓர் ஆசிரியரான பார்த்திபன், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சிலாங்கூர் சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் புக்கிட் மெலாவத்தி தொகுதியில் களம் இறக்கப்படவிருக்கிறார். சிலா​ங்கூர் மாநிலத்தில் மஇகாவிலிருந்து வெளியேறியுள்ள இரண்டாவது முக்கியத் தலைவராக பார்த்திபன் விளங்குகிறார். தனது அரசியல் குருவான தஞ்சோங் காராங் முன்னாள் எம்.பி. டத்தோ நோஹ் ஒமாரின் அலோசனையுடன் நேற்று கோலசிலாங்கூரில் நடைபெற்ற பெரிக்காத்தான் நேஷனல் இந்திய சமூகத்தின் சிறப்பு செயலாகப்பிரிவின் தொடங்கவிழாவில் பார்த்திபன் வரவை சிலாங்கூர் மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அஸ்மின்அலி அறிமுகப்படுத்தினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு