வரும் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்கூட்டியே வாக்களிப்பு, நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு ஏககாலத்தில் தொடங்கியது. போலீஸ்காரர்கள், இராணுவ வீரர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும் தேர்தல் ஆணையத்தின் பணியாளர்கள் என 98 ஆயிரத்து 785 பேர் முன்கூட்டியே வாக்களிக்கவிருக்கின்றனர். கோலத் திரெங்கானு நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் உட்பட 6 மாநிலங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு மையங்கள் கட்டம் கட்டமாக திறக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முன்கூட்டியே வாக்களிப்பில் 46 ஆயிரத்து 660 இராணுவ வீரர்களும் , 47 ஆயிரத்து 726 போலீஸ்காரர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்


