அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தமது வெற்றி வாய்ப்பை சீர்குலைக்கவே தமக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் தெரிவித்துள்ளார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமது அரசியல் வாழ்க்கையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக 48 வயதான முகமட் சனூசி குறிப்பிட்டுள்ளார்.
தாம் இவ்வாறு நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்பதை தமக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள குற்றச்சாட்டின் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பு கிட்டியுள்ளது என்று சனூசி தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்களை அவமதித்தது உட்பட சனூசிக்கு எதிராக இரண்டு நிந்தனை குற்றச்சாட்டுகள் இன்று செலாயாங் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ளன.