Oct 3, 2026
Thisaigal NewsYouTube

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கிறது பக்காத்தான் ஹராப்பான்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்கிறது பக்காத்தான் ஹராப்பான்

மலாக்கா மாநிலத் தேர்தலில் போட்டியிடும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை இன்னும் ஓரிரு வாரங்களில் அறிவிக்கலாம் என்று அதன் தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

கிள்ளானில் இன்று நடைபெற்ற தாபுங் வாரிசான் அனாக் சிலாங்கூர் மற்றும் துவாயான் அனாக் ஹராப்பான் நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திரம் கடந்த இரு மாதங்களாகத் தயாராகி வருவதாகக் கூறினார்.

கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு முடிந்துள்ள நிலையில், இறுதி ஒருங்கிணைப்பு மற்றும் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பெர்சத்து கட்சியுடன் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து கேட்கப்பட்டபோது, அதற்கான வாய்ப்பு இருந்தால் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், இல்லையெனில் தற்போதுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அமிருடின் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →