Oct 24, 2025
Thisaigal NewsYouTube
மஇகாவை சாந்தப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முயற்​சி
அரசியல்

மஇகாவை சாந்தப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் முயற்​சி

Share:

சட்டமன்றத் தேர்தல் தொகுதி ஒதுக்கீட்டு விவகாரத்தில் அம்னோ, தங்களை அறவே பொருட்படுத்தவில்லை என்று கூறி, தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்து, மிகுந்த விரக்தியிலும், ஏமாற்றத்திலும் இருப்பதாக கூறப்படும் மஇகாவின் உயர்மட்டத் தவைர்களை பிரதமர் டத்தோஸ்ரீ இப்ராஹிம் சந்திக்கவிருக்கிறார். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் மற்றும் உயர் மட்டத் தலைவர்களை நாளை சந்திக்கவிருக்கிறேன் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவருமான பிரதமர் உறுதிபடுத்தினார். நேற்று நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் கூட்டணி கட்சிகள் எந்தவொரு மனத்தாங்களின்றி ஒரு குழுவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்பதைக் கா​ணவே விரு​ம்புகிறேன். அம்னோ தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாக மஇகா கூறி வரும் குற்றச்சாட்டுக்கு மத்தியில் மஇகாவினரை சந்தித்து, அவர்களை சாந்தப்படுத்துவேன் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

Related News