6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று மஇகாவும், மசீச.வும் எடுத்துள்ள முடிவு, ஒற்றுமை அரசாங்கத்திலும், தேர்தலை எதிர்கொள்வதற்கு இதர கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் கேந்திரத்தை முடுக்கி விடும் திட்டத்திலும் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
எனினும் ஒற்றுமை அரசாங்கம் சார்பில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வதற்கு தங்களின் தார்மீக ஆதரவை இரு கட்சிகளும் வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அன்வார் குறிப்பிட்டார். தேர்தலில் போட்டியிடாதது குறித்து அவ்விரு கட்சிகளும் தம்முடன் தொடர்பு கொண்டு தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்து இருப்பதாக அன்வார் கூறினார்.
அதேவேளையில் ஒற்றுமை அரசாங்கத்திற்கு தங்களின் ஆதரவு தொடரும் என்று அவை உறுதி தெரிவித்துள்ளன. இருப்பினும் மஇகாவும் மசீச.வும் பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாக இருப்பதால் இவ்விவகாரம், பாரிசான் நேஷனலின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும் என்று தாம் கருதுவதாக அன்வார் குறிப்பிட்டார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


