Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பிகேஆரை விட்டு விலக வேண்டாம், ரஃபிஸி ஆதரவாளர்களுக்குக் கோரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிகேஆரை விட்டு விலக வேண்டாம், ரஃபிஸி ஆதரவாளர்களுக்குக் கோரிக்கை

நீலாய், மே.26-

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிகேஆர் தேர்தலில் துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதில் ரஃபிஸி ரம்லி தோல்விக் கண்டதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் கட்சியை விட்டு விலகுவது போன்ற கடும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று கட்சியின் உதவித் தலைவரும், நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசாருமான டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் கேட்டுக் கொண்டார்.

ரஃபிஸி ரம்லியின் தோல்வியால், கட்சி உறுப்பினர்கள் சிலர் ஏமாற்றம் கொள்ளலாம்.ஆனால், கட்சியை விட்டு வெளியேறுவது அதற்குக் தீர்வாகாது என்று அமினுடின் ஹாருன் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற நடவடிக்கைகள், பிகேஆர் கட்சியின் நிலைத்தன்மையைத் பாதிக்கும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →