முந்தைய பிரதமர்களை போல் இல்லாமல், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சற்று மாறுபட்டு தற்போது நிலவி வரும் டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகை திட்டத்தை துணிச்சலாகவும் நேர்மையாகவும் கையாளும் அவரின் நடவடிக்கை பாராட்டக்குரியது.
இத்திட்டம் ஆண்டுக்கு 4 மில்லியன் வெள்ளி தொகையை சேமிப்பதற்கு பெரும் பங்காற்றும் என்பதுடன் பொருளாதாரம் வாயிலாக சாமானிய மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த ஒரு பெரிய தொகையாகும்.
இதில் முக்கிய கூற்றாக, பல காலங்களாக நாட்டில் ஏற்பட்டு வரும் டீசல் கடத்தலை கட்டுப்படுத்துவதுடன் இதனால் ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான வெள்ளியை இலக்கிட நேரிடும்.
பிரதமரின் இத்தகைய நடவடிக்கையை எதிர்கட்சி அரசியல்வாதிகள் உட்பட பலர் எதிர்த்தாலும் அண்டை நாடுகளுக்கு டீசல் கடத்துவதை தடுப்பதற்கு யாராவது ஒருவர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற வகையில் பிரதமர் அன்வாரின் செயல்பாடு அமைந்தது.
கடந்த 2010 ஆம் ஆண்டு மலேசியாவின் மொத்த மானியத்தின் செலவு 14.2 பில்லியன் வெள்ளி இருந்தபோதிலும் கடந்த 2022 ஆம் ஆண்டு 70.3 பில்லியன் வெள்ளியாக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும், டீசல் மானியத்தின் செலவு 52 பில்லியன் ஆகும். இது மற்ற பொருட்களின் செலவுகளை காட்டிலும் அதிகம் என்பதாகும்.








