Oct 28, 2025
Thisaigal NewsYouTube
வீட்டுக்காவல் சட்டமசோதா விசாரணைக்காக தற்காலிகமாக காத்திருக்கும் தடுப்புக்கைதிகளுக்கு மட்டுமே
அரசியல்

வீட்டுக்காவல் சட்டமசோதா விசாரணைக்காக தற்காலிகமாக காத்திருக்கும் தடுப்புக்கைதிகளுக்கு மட்டுமே

Share:

நவ. 7-

விசாரணை கைதிகளுக்கு சிறைக்கு பதிலாக வீட்டுக்காவலில் வைக்கும் சட்டத்திருத்த மசோதா, நீதிமன்ற விசாரணைக்காக தற்காலிகமாக காத்திருக்கும் தடுப்புக்கைதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபூடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெளிவுபடுத்தியுள்ளார்.

அதேவேளையில் ஆயுள் தண்டனை அல்லது மரணத் தண்டனை விதிப்பதற்கு வகை செய்யும் குற்றவியல் சட்டப்பிரிவின் கீழ் குற்றஞ்சட்டப்பட்டுள்ள கைதிகளுக்கு அல்லது விசாரணைக் கைதிகளுக்கு இது பொருந்தாது என்பதையும் அமைச்சர் விளக்கினார்.

தவிர, கடுங்குற்றங்களுக்காக பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருப்பவர்கள், குடும் வன்முறை சம்பந்தப்பட்ட குற்றச்செயல்கள், போதைப்பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள் முதலிய குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியவர்களுக்கும் இந்த சட்டத்திருத்த மசோதா பொருந்தாது என்பதையும் அமைச்சர் இன்று தெளிவுபடுத்தினார்.

Related News