ஷாஹ் அலாம், ஜூலை 5-
நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் பினாங்கு, Sungai Bakap சட்டமன்ற இடைத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத அளவிற்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் பேராசியர் டத்தோ டாக்டர் P. சிவமுருகன் தெரிவித்துள்ளார்.
பாஸ் கட்சியின் பெரிக்காத்தான் நேஷனல் தொகுதியான Sungai Bakap பில் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
மூன்று தவணைக்காலம் பக்காத்தான் ஹராப்பான் தொகுதியாக இருந்த Sungai Bakap, கடந்த சட்டமன்றத்தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் கைப்பற்றியுள்ளது.
எனினும் நாளை நடைபெறவிருக்கும் இந்த இடைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சரிநிகராக உள்ளதாக சிவமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
இரு கட்சிகளின் தலைவர்களும் தங்களின் தேர்தல் கேந்திரத்தை முழு வீச்சில் முடுக்கியுள்ளதால் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை கணிப்பது சிரமாக உள்ளது என்று அந்த அரசியல் ஆய்வாளர் கூறுகிறார்.








