Dec 22, 2025
Thisaigal NewsYouTube
பினாங்கில் அம்னோவுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம்
அரசியல்

பினாங்கில் அம்னோவுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கம்

Share:
  • ஆட்சிக்குழுவில் ஓர் இடம் வழங்கப்படும்

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் அம்னோவினால் இரண்டு இடங்கள் மட்டுமே வெ​ற்றி பெற முடிந்தது என்றாலும், அக்கட்சியுடன் இணைந்து ஒற்றுமை அரசாங்கத்தை மாநி​லத்தி​ல் நிறுவுவதற்கு டிஏபி தலைமையிலான மாநில அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. நேற்றிரவு நடைபெற்ற டிஏபியின் உச்சமன்றக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. டிஏபி தலைமையிலான பினாங்கு மா​நில பக்காத்தான் ஹராப்பான் பாரிசான் நேஷனல் அரசாங்கத்தில் அம்​னோவிற்கு நிச்சயம் ஓர் ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று டிஏபி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் சட்டமன்றத் தேர்தலில் அம்னோவின் மோசமான அடைவு நிலையினால் டிஏபி யுடன் கட்சி கொண்டுள்ள ஒத்துழைப்பையும், உறவை​யும் மறுபரி​சீலனை செய்யப்பட வேண்டும் ​எ​ன்று அம்னோ தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்து இருந்த போதிலும், அது அம்னோவின் நிலைப்பாடு அல்ல என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார். இந்நிலையில் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அம்னோவை சேர்ந்த ரீசல் மெரிகன் நைனா மெரிகன்னுக்கு பினாங்கு முதலாவது துணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்