புத்ராஜெயா, மார்ச்.17-
வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேரா, ஆயர் கூனிங் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர் அடையாளம் காணப்பட்டு விட்டதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.
வேட்பு மனுத் தாக்கல் நடைபெறுவதற்கு முன்னதாக பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, வேட்பாளர் பெயரை அறிவிப்பார் என்று டாக்டர் ஸம்ரி குறிப்பிட்டார்.
இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு பாரிசான் நேஷனல் தேர்தல் கேந்திரம் தயார் நிலையில் உள்ளதாக அவர் கூறினார்.
பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடுவதற்கு ஆறு பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் ஸம்ரி குறிப்பிட்டார்.