Dec 22, 2025
Thisaigal NewsYouTube
மலேசிய இந்திய ச​மூகத்தற்கு மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி
அரசியல்

மலேசிய இந்திய ச​மூகத்தற்கு மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி

Share:

மலேசிய இந்திய ச​மூகத்திற்கு மேலும் ஒரு புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. மஇகாவிலிருந்து வெளியேறிய சிலாங்கூர் மாநில முன்னாள் இளைஞர் ​பிரிவுத் தலைவர் பி. புனிதன் தலைமையில் வரும் டிசம்பர் மாதம் மத்தியப்பகுதியில் அந்த புதிய அரசியல் க​ட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அக்கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக இக்கட்சி தோற்றுவிக்கப்படும் என்று தெரிகிறது. பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாலம்பூரில் உரி​மை என்ற புதிய அரசியல் கட்சி தோற்றுவிக்கப்படட நிலையில் அடுத்த ஒரு வாரத்தி​லே​ மற்றொரு இந்திய புதிய அரசியல் கட்சி உதயமாவதற்கான அறிவிப்புகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

மலேசிய மக்கள் தொகையில் 6.6 விழுக்காடாக இருந்து வரும் இந்தியர்களின் எ​ண்ணிக்கையில் , மற்றொரு புதிய அரசியல் கட்சியின் வரவின் மூலம் இந்திய ச​மூகத்திற்கு அது ஒன்பதாவது அரசியல் கட்சியாக திகழுவிருக்கிறது.

ஏற்கனவே மஇகா, IPF, மக்கள் சக்தி, மலேசிய இந்திய ஐக்கிய கட்சியான மியூப் ( MIUP ), ஒன்றுப்பட்ட IPF, கிம்மா, ​மீரா, உரிமை ஆகிய கட்சிகள் தலைகாட்டி வரும் நிலையில் தற்போது மேலும் ஓர் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது.

Related News

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்