Jun 27, 2026
Thisaigal NewsYouTube
குடிநுழைவுத்துறையின் ஆல்பல முகப்பிடங்களில் 25 நிமிடத்திற்குள் வருகையாளர் அலுவல் முடிக்கப்படும்
அரசியல்

குடிநுழைவுத்துறையின் ஆல்பல முகப்பிடங்களில் 25 நிமிடத்திற்குள் வருகையாளர் அலுவல் முடிக்கப்படும்

Share:

கோலாலம்பூர், நவ. 19-

நாட்டின் பிரதான நுழைவாயிலான கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வருகையாளர்களின் உச்சக்கட்ட நேரத்தில் மனுவல் முறையில் கையாளப்படும் ஆல்பல முகப்பிடங்களில், போதுமான அதிகாரிகள் இருப்பது எல்லா நிலைகளிலும் உள்துறை அமைச்சு உறுதி செய்யும் என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

மெனுவல் முறையிலான ஆள்பல முகப்பிடங்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையில் எல்லா முகப்பிடங்களிலும் அதிகாரிகள் அமர்ந்து இருப்பர். எந்தவொரு ஆள்பல முகப்பிடமும் காலியாக இருக்காது. ஒவ்வாரு வருகையாளரின் குடிநுழைவு அலுவல், கூடிய பட்சம் 25 நிமிடத்திற்குள் நிறைவு பெறும் என்று சைபுடின் குறிப்பிட்டார்.

எனினும் ஜோகூர்பாரு பாலத்தில் உள்ள குடிநுழைவு கட்டடடத்தில் உச்சக்கட்ட நேரங்களில் குடிநுழைவு அதிகாரிகள் போதுமான அளவில் இல்லாததை அமைச்சர் மறுக்கவில்லை. இருந்த போதிலும் சில மணி நேரங்களில் மட்டுமே இது நிலவும். குறிப்பாக அதிகாரிகள் ஷிப்ட் முறை மாறும் நேரத்திலும், கழிப்பறைக்கு செல்லுதல் அல்லது தொழுகை க்கு செல்லும் பட்சத்தில் இது போன்ற சூழல் ஏற்படுவதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வருகையாளர் ஒருவர், 25 நிமிடத்திற்குள் அலுவலை முடித்து விட்டு வெளியேறுவதற்கான அனைத்து முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் சைபுடின் இன்று விளக்கினார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்