Aug 26, 2026
Thisaigal NewsYouTube
மிகப்பெரிய தவற்றை செய்து விட்டதாக அஸ்மின் அலி கூறுகிறார்
அரசியல்

மிகப்பெரிய தவற்றை செய்து விட்டதாக அஸ்மின் அலி கூறுகிறார்

Share:

பிகேஅர் கட்சி​யின் துணைத் தலைவராக தா​ம் வீற்றிருந்த போது தமக்கு அடுத்து சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு அமிருடீன் ஷாரியை பரிந்துரை செய்தது, தாம் செய்த மிகப்பெரிய தவறாகும் என்று முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி கூறினார்.

2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப்பெற்ற பின்னர் தாம் அமைச்சர் பதவியை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்ட போது, சிலாங்கூர் மந்திரி பெசார் பதவியை கைவிட நேர்ந்ததாக அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

தமக்கு அடுத்து சிலாங்கூர் மந்திரி புசாராக ஈஜோக் சட்டமன்ற உறுப்பின்ர் டாக்டர் இட்ரிஸ் அஹ்மாட்டை தேர்வு செய்வதற்கு பிகேஆர் தலைமைத்துவம் முன்மொழிந்தது. ஆனால், அப்பதவிக்கு அமிருடின் ஷாரியை தாம் முன்மொழிந்ததாக மலேசியா நவ் செய்தித் தளத்திற்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் பெரிக்காத்தான் நேஷனலின் தேர்தல் இயக்குநருமான அஸ்மின் அலி தெரிவித்தார்.

மந்திரி பெசார் பதவிக்கு அமிருடின் ஷாரியை முன்மொழிந்ததற்காக தாம் இன்னமும் வருத்தப்படுவதாக அஸ்மின் அலி குறிப்பிட்டார்.

Related News