கோலாலம்பூர், நவ. 13-
மக்களின் நல்வாழ்வை கருத்தில் கொண்டு அரசியல் வேறுபாடுயின்றி நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பொது பசார்களின் தரம் உயர்ததப்பட்டு வருவதாக வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் அறிவித்துள்ளார்.
அரசியல் சிந்தாந்தங்களுக்கு இடம் அளிக்காமல் மக்களின் நல்வாழ்வை மட்டும் கருத்தில் கொண்டு கிளந்தான், திரெங்கானு போன்ற எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களிலும் ஈரச் சந்தைகளின் தரம் உயர்ததப்பட்டு வருவதாக அமைச்சர் விளக்கினார்.
உதாரணத்திற்கு திரெங்கானு மாநிலத்தில் கோலத்திரெங்கானுவில் உள்ள பசார் பாயாங் சந்தையின் தரத்தை உயர்த்துவதற்கு 12.2 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டில் தற்காலிக பசார் நிர்மாணிக்கும் திட்டம் உட்பட 81.2 மில்லின் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை பெற்று இருப்பதாக ங்கா கோர் மிங் விளக்கினார்.








