Dec 2, 2025
Thisaigal NewsYouTube
மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு
அரசியல்

மூன்று அமைச்சர்கள் மீண்டும் செனட்டராக பதவியேற்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.02-

மூன்று ஆண்டுகளுக்கான செனட்டர் பதவின் முதலாவது தவணையை நிறைவு செய்த மூன்று அமைச்சர்கள், இரண்டாவது தவணையாக, செனட்டராக நாளை புதன்கிழமை நாடாளுமன்ற மேலவையில் பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளவிருக்கின்றனர்.

உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், உயர்க்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸாம்ரி அப்துல் காடீர் மற்றும் சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ டாக்டர் முகமட் நாயிம் மொக்தார் ஆகியோரே பதவி உறுதிமொழி எடுத்துக் கொள்ளவிருக்கும் மூன்று அமைச்சர்கள் ஆவர்.

அவர்களின் முதலாவது தவணைக்கான செனட்டர் பதவிக் காலம் இன்று டிசம்பர் 2 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

Related News