Oct 29, 2025
Thisaigal NewsYouTube
கேமரன் ஹைலேண்ட்ஸ்  தாம் போட்டியிடுவது, அம்னோ தலைமைத்துவத்தின் முடிவை பொறுத்தது
அரசியல்

கேமரன் ஹைலேண்ட்ஸ் தாம் போட்டியிடுவது, அம்னோ தலைமைத்துவத்தின் முடிவை பொறுத்தது

Share:

கோலாலம்பூர், ஜூலை 25-

நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், கேமரன் ஹைலேண்ட்ஸ் நாடாளுமன்ற தொகுதியைத் தாம் தற்காப்பதா இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை, அம்னோவிடமே விட்டுவிடுவதாக, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ராம்லி முகமட் நார் தெரிவித்தார்.

தமது 34 ஆண்டுகால போலீஸ் சேவையில், தலைமைத்துவத்தின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்துக்கொண்டதை போன்று, அம்னோவிலும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்படும் கொள்கையை தாம் கொண்டுள்ளதாக, முன்னாள் போலீஸ் அதிகாரியுமான அவர் கூறினார்.

பூமிபுத்ரா, மலாய்க்காரர்கள், பூர்வக்குடியினர் ஆகியோருக்காக போராடும் ஒரே கட்சி அம்னோ என்பதால், அதில் தாம் இணைந்ததாக கூறிய மக்களவை துணைத்தலைவருமான ராம்லி, கட்சியின் நிலைப்பாடே, தம்முடைய நிலைப்பாடும் என்றார்.

Related News