Oct 15, 2026
Thisaigal NewsYouTube

லஞ்ச எதிர்ப்புப் பேரணி பிசுபிசுத்தது

திசைகள் செய்திப்பிரிவு
Share:

கோலாலம்பூர், ஜன.25-

மிகப்பெரிய அறிவிப்பு மற்றும் ஆர்ப்பாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட லஞ்ச ஊழலுக்கு எதிரான பேரணி பிசுபிசுத்தது.

கோலாலம்பூர் மாநகரின் மையப்பகுதியில் பிற்பகலில் நான்கு திக்கிலும் ஆயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 6 மணி வரையில் பேரணி ஏற்பாட்டாளர்களால் 300 பேரைக் மூட திரட்ட முடியாதது பெரும் ஏமாற்றத்தில் முடிந்தது.

இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி அளிக்க மாட்டார்கள், இதனை காரணமாக வைத்து இந்த பேரணியில் உரையாற்றவும், வீர வசனங்களை முழங்குவதற்கும், தங்களை நாயகர்களாக காட்டிக்கொள்வதற்கும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், இந்தப் பேரணிக்கு போலீசார் அனுமதி வழங்கியதும் பின்வாங்கத் தொடங்கினர்.

லஞ்ச ஊழலுக்கு எதிரான இந்தப் பேரணி எந்தவொரு சுவாரஸ்மான விஷங்களின்றி முடிந்ததுதான் பெரும் ஏமாற்றம் என்று பலர் தெரிவித்தனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →