Dec 16, 2025
Thisaigal NewsYouTube
16 ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: பிகேஆர் உறுப்பினர்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து
அரசியல்

16 ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: பிகேஆர் உறுப்பினர்களுக்கு டத்தோஸ்ரீ அன்வார் வலியுறுத்து

Share:

ஜோகூர் பாரு, மே.24-

நாட்டின் 16 ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகும் வகையில் பிகேஆர் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கட்சித் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் மாற்றத்தைக் காண விரும்பும் மக்களுக்கு ஒரு தளமாக பிகேஆர் விளங்குகிறது என்று டத்தோஸ்ரீ அன்வார் புகழாரம் சூட்டினார்.

பிகேஆர் கட்சியின் தேர்தல் நிறைவு பெற்று விட்டதால், கட்சியில் அணி என்ற பிணிக்கு இனி இடம் அளிக்கக்கூடாது என்று கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை டத்தோஸ்ரீ அன்வார் கேட்டுக் கொண்டார்.

ஜோகூர் பாருவில் நடைபெற்ற பிகேஆர் மாநாட்டில் பேராளர்களின் விவாதங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கையில் நாட்டின் பிரதமருமான அன்வார் இதனை வலியுறுத்தினார்.

துன்பப்பட்டவர்களுக்குக் குரலாகவும், பலவீனப்பட்டவர்களுக்குப் பாதுகாவலர்களாகவும் பிகேஆர் தொடர்ந்து விளங்கிட வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கோரிக்கை விடுத்தார்.

Related News

16 ஆவது பொதுத் தேர்தலுக்குத் தயாராகுங்கள்: பிகேஆர் உறுப்ப... | Thisaigal News