Oct 21, 2025
Thisaigal NewsYouTube
சாதனை அறிக்கையை வெளியிட்டது சிலாங்கூர் அரசு
அரசியல்

சாதனை அறிக்கையை வெளியிட்டது சிலாங்கூர் அரசு

Share:

சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையிலான மாநில அரசு, கடந்த 2018 முதல் 2023 வரையில் அடைந்த சாதனைகளை விவரிக்கும் அதன் ஐந்தாண்டு அறிக்கை அட்டையை வெளியிட்டது.

மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட ஏராளமான மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் குறிப்பாக, நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பிந்தைய மாநிலத்தின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான நிர்வாகம் செய்த சாதனைகள் 161 பக்கங்களை உள்ளடக்கிய ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

இவை தவிர, மாநிலத்தின் எதிர்காலத் திட்டங்களும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
"சிலாங்கூரின் செழிப்பான மற்றும் பொன்னான ஐந்தாண்டுகள்" என்ற தலைப்பில் 2018 முதல் 2023 வரையிலான சிலாங்கூர் மாநில அரசின் சாதனை மற்றும் வெற்றி அறிக்கையை வெளியிடுவதில் தாம் மகிழ்ச்சி அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!