Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி தேர்தல்: ரஹாங் தொகுதியில் பிஎஸ்எம் சார்பில் 'Cikgu Tina' போட்டி; மூடா கட்சி விலகல்
அரசியல்

நெகிரி தேர்தல்: ரஹாங் தொகுதியில் பிஎஸ்எம் சார்பில் 'Cikgu Tina' போட்டி; மூடா கட்சி விலகல்

Share:

சிரம்பான், ஜூலை.16-

நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், ரஹாங் (Rahang) தொகுதிக்கான தங்களின் ஒரே வேட்பாளராக ' Cikgu Tina ' என்று பிரபலமாக அழைக்கப்படும் எஸ். தினகரனை மலேசிய சோசலிஸ்ட் கட்சியான PSM அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிஎஸ்எம் மற்றும் மூடா கட்சிகள் இணைந்த 'முற்போக்கு கூட்டணி' நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இத்தேர்தல் தளம் மூலம் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனலுக்கு மாற்றாகப் பொதுமக்களின் பிரச்சினைகளையும் சோசலிசக் கருத்துகளையும் முன்னெடுக்கப் போவதாக தினகரன் கூறினார். இதற்கிடையே, ஜெராம் பாடாங் (Jeram Padang) தொகுதியில் மலேசிய பூர்வகுடி மக்கள் கட்சி சார்பாக Dayana Dal போட்டியிடுகிறார்.

இதனிடையே, அண்மையில் நடந்து முடிந்த ஜோகூர் தேர்தலில் ஒரு இடத்தைக்கூட வெல்ல முடியாததால், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் தங்களின் மூடா கட்சி போட்டியிடாது என்று அதன் தலைவர் அமிரா ஆயிஷா அப்துல் அஜிஸ் தெரிவித்துள்ளார். மாறாக, ரஹாங் தொகுதியில் பிஎஸ்எம் வேட்பாளருக்கு ஆதரவளித்து, அடுத்த பொதுத் தேர்தலுக்குக் கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News