Sep 23, 2026
Thisaigal NewsYouTube
சுவாவில் வேட்பாளர் நியமனச் சிக்கல் தீர்ந்தது: அமினுடின் ஹருன் தகவல்
அரசியல்

சுவாவில் வேட்பாளர் நியமனச் சிக்கல் தீர்ந்தது: அமினுடின் ஹருன் தகவல்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலம், சுவாவில் உள்ள சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர் நியமனத்தை ஒட்டி எழுந்த சிக்கல்கள் ஏற்கனவே சுமூகமாகத் தீர்க்கப்பட்டுவிட்டதாகவும், இதனால் கட்சியின் தேர்தல் பணிகளில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அம்மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டத்தோஸ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகள் மற்றும் புகார்கள் சில நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டுவிட்டதாகவும், போர்டிக்சன் பிகேஆர் கிளை துணைத் தலைவர் டத்தோ கென்னி சியூ சி கின் சுவா, லுகூட், ஸ்ரீ தஞ்சுங், பாகன் பினாங் மற்றும் லிங்கி ஆகிய அனைத்து தொகுதிகளுக்கும் தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News