பினாங்கு மாநில ஆட்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி தற்காத்துக்கொண்டது. 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 தொகுதிகளை அக்கூட்டணி வென்றுள்ளது. டிஏபி தலைவர் லிம் குவான் எங் தமது ஆயேர் புத்தே தொகுதியை தற்காத்துக்கொண்டார். இதே போன்று முதலமைச்சர் சௌ கோன் இயோவ் வும் தமது பாடாங் கோத்தா தொகுதியை தற்காத்துக்கொண்டார். பாரிசான் நேஷனலை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன், யாரும் எதிர்பார்க்காத நிலையில் பெர்த்தாம் தொகுதியில் வெற்றி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பினாங்கு மாநிலத்தை கைப்பற்றியது மூலம் ஆளும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், நான்காவது தவணையாக பினாங்கு மாநில ஆட்சியை தற்காத்துக்கொண்டது.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


