கோல குபு பாரு, மே 11-
இன்று மிக பரபரப்பாக நடைபெற்று வரும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலின் அதிகாரப்பூர்வமான முடிவு, இரவு 9 மணிக்குள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..
தேர்தல் முடிவை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அது இரவு 10 மணிக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டு விடும் என்று தேர்தல் ஆணையத்தின் துணைத் தலைவர் அஸ்மி ஷரோம் தெரிவித்தார்.
39,362 வாக்காளர்களை கொண்டுள்ள கோலகுபு பாரு தொகுதியில் 18 இடங்களில் வாக்களிப்பு நடைபெற்று வருகிறது. மாலை 6 மணிக்குள் குறைந்த பட்சம் 70 விழுக்காடு வாக்குகள் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.








