Oct 27, 2025
Thisaigal NewsYouTube
அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ காணாமல் போகும்
அரசியல்

அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ காணாமல் போகும்

Share:

அம்னோவும் டிஏபி-யும் தொடர்ந்து கூட்டணி அமைத்தால் நிச்சயமாக, 16 வது பொதுத் தேர்தலின்போது அம்னோ காணாமல் போகும் என கெமாமான் இடைத் தேர்தல் முடிவை சுட்டிக் காட்டி பேசினார் முன்னாள் பிரதமர் துன் மகாதீர்.

அம்னோவுக்கு ஆதரவு குறைகின்றது என்பதை கெமாமான் இடைத் தேர்தல் முடிவு காட்டி விட்டது. டிஏபி யுடன் கூட்டணி தொடர்ந்தால் அது அடுத்தப் பொதுத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என துன் மகாதீர் குறிப்பிட்டார்.

மலாய் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் அம்னோ தொடர்ந்து உயிர்பெற்று நிலைத்திருக்க டிஏபியை விட்டு விலக வேண்டும் என்று மகாதீர் பரிந்துரைத்தார்.

கடந்தகாலத்தில் வறுமையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதில் அம்னோவின் பங்கு குறித்து இளம் வாக்காளர்களுக்கு தெரியாது என்றார்.
பழைய தலைவர்களை நீக்க வேண்டும். மலாய்க்காரர்களின் பிரச்சனைகளுக்காக, அவர்களின் ஏழ்மை குறித்து மீண்டும் போராட வேண்டும் என அம்னோவின் முன்னாள் தலைவரான மகாதீர் கூறினார்.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்